தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா…. 2,399 பேருக்கு  அறிகுறி இல்லாமல் பரவிய தொற்று…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!


சீனாவில்  2,399 பேருக்கு  அறிகுறி இல்லாத கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் முதல் முறையாக கொரோனா நோய் தொற்று  ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா  நோய் தொற்று  ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து கொண்டே வருகின்றது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகி  உள்ள நிலையில், சீனாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 3,036 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 2,399 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதியதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,36,898 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.