தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கீழக் கடையம் ஊராட்சி மன்றம் சார்பாக வாசுகிரி மலைப் பகுதியில் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். அத்துடன் கடையம் ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டிகே பாண்டியன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் மரக்கன்று நட்டு துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைமை ஆசிரியை மாரி செல்வி, உதவி தலைமை ஆசிரியை மேரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகைதீன் பாத்திமா, பணிதள பொறுப்பாளர் பொன் பாண்டி, ஊராட்சி செயலாளர் ஜெய சக்திவேல் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
The post சுதந்திரதினம் எதிரொலி!…. 75 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…. வெளியான தகவல்….!!!! appeared first on Seithi Solai.