தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. அதன்படி,
ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது.
பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்து பார்க்க கூடாது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கி விடலாம். நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Post Views:
0