பழனிசாமி ஓடி ஒளிகின்ற தீர்ப்பு; புகழேந்தி அதிரடி


அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி தருணம் இது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுச் செயலாளர் பதவியை தூக்கி எறிந்து விட்டு அந்தப் பதவியை தான் அடைய வேண்டும் என்ற சர்வாதிகாரிக்கு கிடைத்த எதிர்ப்பான தீர்ப்பாக பார்க்கிறோம்.

இதை தொண்டர்களும் வரவேற்பார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் வரவேற்பார்கள். இது அதிகாரம் படைத்த எடப்பாடி பழனிசாமி இதற்கு சர்வாதிகாரியாக இருக்க முடியாது என்பதை உணர வேண்டும் என்கின்ற அளவிலே இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. மிகவும் வரவேற்க கூடிய தீர்ப்பு.

ஒரு தலைமையை ஒழிக்க பார்த்தவர்களுக்கு கிடைத்த தீர்ப்பு தானே இது. ஒரு தலைமை என்பது அவரை முற்றிலும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைத்த  பழனிசாமி ஓடி ஒழிகின்ற தீர்ப்பாகத்தான் பார்க்க முடிகிறது. ஆகவே தவறாக  இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது போக போக இன்னும் பெரிய மாறுதல்கள் ஏற்படும். அதில் நிச்சயமாக அவரால் தாங்கிக் கொள்ள முடியாது.

யாரு தோற்றாலும் வெற்றிபெற்றாலும் மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை முதலில் இருந்து ஆராய்ந்து தீர்ப்பு வழங்க வேண்டும். முழுவதும் தெரிந்து தீர்ப்பு வழங்க வேண்டும். நாங்கள் பொதுக்குழுவை கூட்ட சொல்லவில்லை. எங்கள் தவறுதலாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னதன் அடிப்படையில் தான் இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எனது தனிப்பட்ட கருத்தாக உச்ச நீதிமன்றம் கூட இந்த தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்ளும். ஆகவே இதில் எடப்பாடிக்கு சறுக்கல் தான், மேலே வருவதற்கு வழியே கிடையாது. ஆகவே அந்த நிலை ஏற்பட்டுவிட்டது. இது என்னை பொருத்தவரை பொதுச் செயலாளர், நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா என்று சொல்லி அதை அடைய நினைத்த துரோகிகளுக்கு கிடைத்த தீர்ப்பாக பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post பழனிசாமி ஓடி ஒளிகின்ற தீர்ப்பு; புகழேந்தி அதிரடி appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.