துருக்கியின் பிங்கோல் அருகே உள்ள கந்தர் கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. பின்னர் வலிதாங்காமல் துடித்த அந்த சிறுமி அந்த பாம்பை கையில் எடுத்து வாயில் வைத்துக் கடித்துள்ளார். இதில் பாம்பு இரண்டு துண்டானது.
பாம்பின் ஒரு பகுதி தரையில் விழுந்தது. மற்ற பகுதி சிறுமியின் வாயில் இருந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனே சிறுமியை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிறுமி முழுமையாக குணமடைந்துள்ளார்.
Post Views:
0