தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து முக்கிய சந்திப்பை நிகழ்த்த இருக்கின்றார். காலையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மாலையில் பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன்.
அந்த கோரிக்கைகள் ஓரளவு நிறைவேற்றக்கூடிய சூழல் இருந்தாலும், இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கு என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடியை சரியாக 4 மணியளவில் சந்தித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு துவக்க விழாவில் போட்டிகளை தொடங்கி வைத்ததற்காக தனது நன்றியை தெரிவித்து இருக்கின்றார். அதேபோல தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கியதற்கும் அவர் நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் அவர் முன்வைக்க இருக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன.ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்திருக்கிறார். இன்றைய தினம் கடந்த சந்திப்புகளின் போது என்னென்ன மாதிரியான முக்கிய கோரிக்கைகள் எல்லாம் முன்வைக்கப்பட்டதோ அவை அனைத்தும் நினைவூட்டப்படும் என்று சொல்லியிருந்தார்.
அந்த அடிப்படையில் மேகதாது அணை விகாரகம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, காவிரி நதிநீர் பிரச்சனை, கச்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், பாரம்பரிய மீன் பிடிப்பு முறையை உறுதிப்படுத்துதல், மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப பெறுதல், நிலுவையில் இருக்கக்கூடிய தமிழகத்திற்கான நிதி ஆதாரங்களை முழுமையாக வழங்குவது போன்ற பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திருக்கின்றார்.
நீட் விவகாரம் இந்த சந்திப்பின்போது அதி முக்கியமானதாக முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தமிழகத்தில் நீட் தொடர்பான தற்கொலைகள் நடந்து வரக்கூடிய சூழலில், அந்த விஷயத்தை சுட்டிக்காட்டி இந்த சந்திப்பின்போது நீட்டு விவரம் தொடர்பாக தனது கோரிக்கையை அவர் முன்வைக்க இருக்கின்றார். அதேபோல ஜிஎஸ்டி நிலுவை தொகையினை உரிய நேரத்தில் வழங்குவது, பேரிடர் காலத்தில் உரிய முறையில் அந்த நிதிநிலை வழங்குவது மற்றும் வரக்கூடிய காலங்கள் தமிழகத்திற்கு மழை உள்ளிட்டவை வரவிருக்கின்றது அந்த சமயத்தில் தேவையான உதவிகளை மத்திய அரசு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் வலியுறுத்த இருக்கின்றார்.
மற்றபடி நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய கோரிக்கையான மதுரையில் எய்ம்ஸ் அமைத்தல் மற்றும் தற்போது சென்னை விமான நிலைய விரிவாக்கம், கோவை விமான நிலையம் விரிவாக்கம், தமிழகத்தின் கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் தொடர்பான முக்கிய கோரிக்கைகளும் இந்த சந்திப்பின்போது முன்வைக்க இருக்கின்றார்.
புதிய கல்விக் கொள்கையை நீக்குதல், சிறுகுறி தொழிலுக்கான சிறப்பு அங்கீகாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். சென்னை மெட்ரோவிற்கான இரண்டாம் கட்ட திட்டத்திற்கான விரிவுப்பணிகளுக்கான நிதிநிலை ஒதுக்குவது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களும் நினைவூட்டப்பட இருக்கின்றது. இந்த சந்திப்பின்போது நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய கோரிக்கைகள் பிரதானப்படுத்தவும், புதிதாக வைக்கக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்திருக்கின்றார்.
Post Views:
0