ஓபிஎஸ்-க்கு கிடைத்த முதல் வெற்றி….. ஜெ. நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை….!!!!


மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று காலை 11:30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார். அதில் அதிமுகவின் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணைய ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு செயற்குழுவை கூட்டவேண்டும். தனி கூட்டம் கூட்டக்கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் .

கோட்டின் தீர்ப்பையடுத்து ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டார்.  இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.