பெற்றோர்களே உஷார்….! தவறுதலாக WATER HEATERஐ தொட்டதால் விபரீதம்…. சிறுவன் உயிரிழப்பு….!!!!


வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் – பேபி தம்பதிக்கு 3ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பேபி தனது மகன் கிருத்திக்குடன் தனது தாயார் ராமத்தாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்காக சூடு தண்ணீர் செய்வதற்காக வீட்டிலிருந்த மினி எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் கருவியை ராமாத்தாள் பயன்படுத்தியுள்ளார்.

அப்போது தவறுதலாக சிறுவன் கிருத்திக் அந்த வாட்டர் ஹீட்டரை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கிய சிறுவன் சம்பவம் இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து வாட்டர் ஹீட்டரை அணைப்பதற்காக அங்கு வந்த ராமாத்தாள் பேரன் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கணவர் இறந்த 3 மாதங்களில் மகனும் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.