தமிழக முதல்வர் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு தொகை வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் வைத்து பரிசு தொகை வழங்கி பாராட்டினார். அதன்படி இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்ட பிரணவ் வெங்கடேஷ்க்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற பவானி தேவிக்கு 35 லட்ச ரூபாய்க்கான காசோலையும், ஸ்குவாஸ் ஆண்கள் போட்டியில் 2 வெண்கல பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக்கு 40 லட்ச ரூபாய்க்காண காசோலையும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தீபிகா பல்லிகலுக்கு 20 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இதேபோன்று இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மேசைப்பந்து ஆண்கள் போட்டியில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம் என 4 பதக்கங்கள் வென்ற சரத் கமலுக்கு 1 கோடியை 80 லட்ச ரூபாய் காண காசோலையும், மேசைப்பந்து ஆண்கள் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்ற சத்தியனுக்கு 1 கோடி ரூபாய் காண காசோலையும் வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள் 5 பேருக்கு 51 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அதன்படி 4 கோடியே 31 லட்சம் ரூபாய் காண காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை விளையாட்டில் சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழக முதல்வர் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பரிசுத்தொகை வழங்கிய ஊக்கப்படுத்தியதோடு, சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சியை கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
Post Views:
0