சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கு உள்ள பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!! appeared first on Seithi Solai.