சைக்கிள் மீது மோதிய வேன்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கரூரில் கோர விபத்து…!!


சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னையம்பாளையம் புதுப்பட்டி பகுதியில் நடராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று குப்பாச்சி பகுதியில் நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவரின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.