சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையிலுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசியக் கொடி ஏற்றினார். இதையடுத்து அவர் சாரண, சாரணியர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். நிலவுக்குச் சென்றவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த வருடம் ரத்து செய்யப்படும் என வெளியான தகவல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இதை மறுத்த அவர் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைமுறை தொடரும் என்றும் அதில் குழப்பம் வேண்டாம் என்றும் பதிலளித்தார். 11 ஆம் வகுப்பில் பாடங்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால் தான் பொதுத் தேர்வு முறையே கொண்டுவரப்பட்டது. ஆகவே 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.
Post Views:
0