இந்தியாவின் 76 வது சுதந்திர தினம்… வாழ்த்துக் கூறிய அண்டை நாடு…!!!!


இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி வண்ணத்திலான  தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். இந்திய சுதந்திர தினத்திற்கு நேபாள் அரசு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளது.

மேலும் நேபாள வெளி விவகார மந்திரி டாக்டர் நாராயணன் காத்கா  இந்திய வெளி விவகார மந்திரி  டாக்டர் எஸ் ஜெயசங்கரை தொடர்புகொண்டு நேபாளம் சார்பில் இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தின மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறியுள்ளார். இதனை நேபாள வெளி  விவகார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இந்த சூழலில் இதற்கு முன்பாக இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அதில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 75 ஆவது விடுதலை கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். காந்தியின் உண்மை, அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை  வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகின்றது என கூறியுள்ளார். மேலும் இந்திய அமெரிக்க சமூகத்தினர் அமெரிக்காவை அதிக புதுமையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி இருக்கிறார் என கூறியது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 75வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என கூறியுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.