“இஸ்ரேல் வான்வழி தாக்குதல்”…. 3 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!


சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுகின்றனர். பல வருடங்களாக நீடித்துவரும் இப்போரால் பெண்கள், குழந்தைகள் உட்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்நிலையில் சிரியாவின் சனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், எதிரிநாடான இஸ்ரேல் வான் வழியே நடத்திய ஏவுகணை தாக்குதல் டமாஸ்கஸ் நகரில் சில பகுதிகளை இலக்காக கொண்டிருந்தது.

இதற்கு பெய்ரூட்டின் தென் கிழக்கு வான்வழி பகுதியை இஸ்ரேல் பயன்படுத்தி இருக்கிறது. இதேபோல் தெற்கு டார்டவுஸ் நகரின் சில பகுதிகளை இலக்காக கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்திய தரைக் கடல் பகுதியின் வான் வழி பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து சிரிய வான்வழி பாதுகாப்பு அமைப்பு, அத்தாக்குதல்களை எதிர் கொண்டு சில ஏவுகணைகளை வீழ்த்தியது. இவற்றில் 3 ராணுவ வீரர்கள் இறந்தனர். அத்துடன் 3 பேர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி பொருட்களும் சேதமடைந்து இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.