நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!


தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி விடை செபஸ்தியார் கோவில் தெருவில் சகாயராஜ் என்பவர் வசிகர் வருகிறார். இவருக்கு ஸ்டாலின் ரோஜன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் ரோஜன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஸ்டாலின் ரோஜன் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.