அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பரவுவதால் பொதுமக்கள் கடும் பீதியில் இருக்கின்றனர்.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பல்வேறு விதமான பாதிப்புக்குள்ளாகி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே தொற்று அதிகரித்து வருகிறது.
இங்கு தினசரி 2000 பேருக்கு தொற்று உறுதியாகிறது. அதன்பிறகு 1440 பேருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்று உறுதியாகயுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5226 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இதுவரை வைரஸ் தொற்றினால் 2 லட்சத்து 34 ஆயிரத்து 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அறிகுறிகள் இல்லாத கொரோனா வைரஸ் பலருக்கு பரவுவதால் பொதுமக்கள் பீதியில் இருக்கின்றனர்.
The post அறிகுறிகள் இல்லாமல் பரவும் கொரோனா…. 2 லட்சத்தை தாண்டிய வைரஸ் பாதிப்பு…. பீதியில் மக்கள்….!!!! appeared first on Seithi Solai.