செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து அரசியல் பேசினோம் என கூறியதால், அய்யோ ரஜினி அவர்கள் நம்மளை பற்றி பேசி இருப்பாரா என்று திமுக உட்பட அதன் க்கூட்டணி கட்சிகள் பயத்தில் பேசி வருகின்றன. அதனால் ரஜினி அவர்கள் அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை, ரஜினி அவர்கள் ஆளுநரை சந்தித்ததும் எந்த தவறும் இல்லை, ஆளுநர் அவர்கள் சாதாரண மனிதர்களையும் சந்திக்கின்றார். இது எல்லாம் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த உரிமையும் கிடையாது.
கம்யூனிஸ்ட்காரர்களுக்கு வேலை இல்லை. திமுக கொடுக்கக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிலே சுமந்து கொண்டு, அதை முக்குல வைத்துக்கொண்டு உயிரோடு சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அரசியல் என்றாலே, ஓஹோ நம்மளைப் பற்றி தவறாக கூறியிருப்பார்கள் என்று, குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும், ஊழல் செய்தவர்களுக்கு குறுகுறுக்கும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். யாரெல்லாம் அரசியலில் தப்பு செய்துள்ளார்களோ, அவர்கள்தான் முதலில் பேசுகிறார்கள். உங்களுக்கு ஏன் பயம். நீங்க நல்ல அரசியல் செய்தால் ரஜினி அவர்கள் ஏன் உங்களைப் பற்றி பேச போகிறார்.
சமீபத்தில் தமிழ்நாட்டு தினத்திற்கு ஆளுநர் அழைத்திருந்தார்கள், அதற்கு திமுகவிலிருந்து யாருமே வரவில்லை, ஆனால் அதற்க்கு நாங்கள் போயிருக்கின்றோம், ஆளுநருடைய பிரிவு உபச்சார நிகழ்ச்சிக்கு போயிருந்த போது பழைய ஆளுநரும் சரி, புதிய ஆளுநரும் சரி அற்புதமான மனிதர்களை வரவழைக்கிறார்கள்.சாதாரண மனிதர்கள், மாற்றுத்திறனாளிகள், சாதாரணமான வேலை செய்யக்கூடிய மனிதர்கள், தனித்தன்மை படைத்தவர்கள் எல்லாரையும் ஆளுநர் மாளிகைக்கு வந்து அவரை சந்திக்கும்போது,
ரஜினி அவர்களை சந்தித்ததை மட்டும் நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சிகளோ, வேறு கட்சிகளும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரோ இதை அரசியலாக்க நினைக்கின்றார்கள்.ரஜினி அவர்கள் பேசியது நாட்டு அரசியல். அதில் எந்தவித தவறும் கிடையாது. அடுத்து என்ன சொல்வார்கள் என்றால்…. பேருந்தில் கூட அரசியல் பேசக்கூடாது . அடுத்த ரூல்ஸ் போடுவார்கள் திமுகவினர் என தெரிவித்தார்.
Post Views:
0