பிறந்த 1 மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை….. துடிக்கத்துடிக்க கொன்ற தாய்….. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அடுத்துள்ள உடுமனூர் முக்குளி கிராமத்தை சேர்ந்த சதீஸன் மற்றும் சுஜிதா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மூன்றாவது முறையாக கர்ப்பமான சுஜிதா தனது கணவருக்கு தெரியாமல் மறைத்து வந்தார். வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கேட்டபோது உடல் பருமன் கூடி விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் சுஜிதா திடீரென ரத்த அழுத்தம் அதிகமாகி வீட்டில் மயங்கி விழுந்தார்.

அதனைக் கண்டு அவரின் கணவர் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பிரசவமானது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு குழந்தை பிறந்ததாகவும் குடும்ப வறுமையின் காரணமாக அதனை குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியல் மூழ்கடித்து கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜிதாவை கைது செய்துள்ளனர். பிறந்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை துடிக்க துடிக்க தண்ணீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.