அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடன் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென பாஜகவினர் காரை வழிமறித்து காலனி வீசினர்.. மேலும் காரை சூழ்ந்து தாக்க முற்பட்டனர்.. இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதால் தாக்குதல் என தகவல் வெளியானதுது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நள்ளிரவு 12.21மணிக்கு நிதியமைச்சரை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
Post Views:
0