கனடாவில் 1059 பேர் குரங்கம்மை நோயால் பாதிப்பு… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!


கனடா நாட்டில் சுமார் 1059 நபர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார கழகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பாதிப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டில் சுமார் 10,000-த்திற்கும் அதிகமானோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது, கனடா நாட்டில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் பொது சுகாதார கழகம் தெரிவித்திருப்பதாவது, ஒன்றாரியோ மாகாணத்தில் 511 நபர்கள், ஆல்பெர்ட்டா நகரில் 19 நபர்கள், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 98 நபர்கள், கியூபெக் நகரில் 426 நபர்கள், யுகான் நகரில் இரண்டு பேர், சாஸ்கத்சிவான் நகரில் மூன்று நபர்கள் என்று மொத்தமாக சுமார் 1059 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.