நயன்தாரா கெட்டப்பில் நடிகை ஆர்த்தி…. புகழ்ந்த விக்னேஷ் சிவன்….. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!


இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரபல நடிகை நயன்தாரா இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் ஜூன் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது நயன்தாராவின் திருமண உடை மற்றும் அணிகலன்கள் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியது. மேலும் பல பேர் நயன்தாரா போல் உடை அணிந்து சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி, நயன்தாராவின் திருமண உடை போல் அணிந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு, “என்ன கொடுமை இது” என குறிப்பிட்டுள்ளார். இப்பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குனர் விக்னேஷ்சிவன், நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி என குறிப்பிட்டிருக்கிறார். இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.