“உங்களது கழுத்தில் புழு இருக்கிறது” நூதன முறையில் பணத்தை திருடிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!


முதியவரிடமிருந்து பணத்தை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலகளத்தூர் பகுதியில் மாரிமுத்து(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியில் இருக்கும் வங்கியில் ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த பணத்தை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு மாரிமுத்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் உங்களது கழுத்துப் பகுதியில் அரிப்பு புழு இருக்கிறது என முதியவரிடம் கூறியுள்ளனர்.

இதனால் முதியவர் அருகில் இருந்த ஒரு தொட்டியில் தான் கொண்டு சென்ற மஞ்சள் பையை வைத்துள்ளார். சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.இதுகுறித்து முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நூதன முறையில் பணத்தை திருடி சென்ற வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.