இந்தப் படம் போதுமா..?”எப்போதும் என்னுடையவர்”… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை…!!!!!


தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. இதனைத் தொடர்ந்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்கமறு, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார். பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன் தொழில் அதிபர் ஷானித் ஆசிப் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் எனது அடுத்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கிறேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைதளங்களில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

ரசிகர்கள் பலரும் திருமணம் ரத்தாகிவிட்டது உண்மையா என பூர்ணாவிடம் கேள்வி எழுப்பி  வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு எப்போதும் என்னுடையவர் என்று குறிப்பிட்டு திருமண ரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். மேலும் எனது திருமணம் நிச்சயத்தபடி நடைபெறும் என்பதை உறுதி செய்ய இந்த படம் போதுமா என பூர்ணா கேட்பது போல அவருடைய பதிவு இருக்கின்றது. இதனை அடுத்து வலைதளத்தில் ரசிகர்கள் பூர்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.