டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வலுவாக காலூன்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேலைவாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குஜராத் மக்களை கவர இன்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதிஷ் தாக்கூர் கூறியதாவது:- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு 10 மணி நேரம் இலவச மின்சாரம், அதுவும் பகலில் வழங்கப்படும். மின் திருட்டு தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் மின் திருட்டு வழக்குகளையும் திரும்பப் பெறுவோம் என தெரிதிவித்துள்ளது.
Post Views:
0