ஆந்திர மாநிலம் கொத்தாப்பேட்டை காவல் நிலையத்திற்கு ஒரு பெண் மனித தலையுடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள கொத்தாப்பேட்டை ராமநாதபுரம் என்ற பகுதியை சேர்ந்த சுபம்மா என்பவரின் மருமகள் வசுந்தரா. இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப சண்டை வந்துள்ளது. வசுந்தராவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்ததாக சுபம்மா சந்தேகப்பட்டு உள்ளார். மேலும் வசுந்தரா தனது குடும்ப சொத்து அனைத்தையும் அவரின் பெயருக்கு மாற்றி விடுவார் என்று பயந்து இருந்தார் .
மேலும் சுபம்மாவும் மற்ற உறவினர்களும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட வருமாறு வசுந்தராவை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளனர். அங்கு வந்த வசுந்தராவை சுபம்மா அறிவாளால் தலையை துண்டாக வெட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் அந்த தலையை எடுத்துக்கொண்டு சுமார் ஆறு கிலோமீட்டர் நடந்து காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதை பார்த்து காவல் நிலையமே அதிர்ச்சி அடைந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Post Views:
0