TVல பார்தோம்ல…! ஸ்டாலினுக்கு கவலையே இல்லை..! அலர்ட் கொடுத்த எடப்பாடி ..!!


அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம் ஆட்சி செய்தது அம்மா தலைமையில்…. அம்மா மறைவுக்குப் பிறகு உங்களுடைய ஆதரவோடு 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தேன்.

எங்களுடைய ஆட்சி அமைப்பதற்கு எவ்வளவு வேலைகள் செய்தோம் என்று நாட்டு மக்கள் அறிவார்கள். உங்களின் சதி அத்தனையும் நாங்கள் முறியடித்தோம், சந்தர்ப்பத்தின் காரணமாக நீங்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இன்றைக்கு முதலமைச்சராக உள்ளீர்கள். ஆகவே மக்களுடைய குறைகளை போக்குவதற்காக, உங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள்,

மக்களை பழிவாங்குவதற்காக அல்ல, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களையும், நிர்வாகிகையும் பழி வாங்குவதற்காக உங்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கவில்லை.ஏதோ நீண்ட காலமாக நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள், சந்தர்ப்ப சூழ்நிலையிலே  இன்றைக்கு முதலமைச்சராக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்.

இதை வைத்து நல்லது செய்ய பாருங்கள், நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய பாருங்கள். நீங்கள் மக்களை மறந்தால் மக்கள் உங்களை மறப்பது உறுதி. அது மட்டுமல்ல குடும்ப ஆட்சி. குடும்பத்தில் இருக்கின்றவர்கள் அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதலமைச்சர் இப்போது ஆண்டு கொண்டு இருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தான் குடும்பம் ஆட்சி அதிகாரம் செலுத்துகிறார்கள். இலங்கையிலே என்ன ஆச்சு ? குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை செய்து கொண்டிருந்தார்கள், மக்கள் புரட்சி வெடித்தது. அந்த நாட்டினுடைய அதிபர் தப்பித்தால் போதும் என்று தலையை தெரிக்க ஓடிய காட்சி தொலைக்காட்சியில் பார்த்தோம்.

அதேபோல் தான் குடும்பத்தில் இருக்கின்றவர்கள் ஆட்சி கொண்டிருக்கின்றனர், கட்டுப்படுத்த முடியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின். செயல் அற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், நாட்டை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என விமர்சித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.