தொடர்ந்து ஓடும் ராஜபக்சே…. சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ஆம் தேதி இராணுவ விமானத்தில் தப்பிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து கோத்தப்பையர் ராஜபக்சே மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். இவரின் விசா காலம் நேற்றுடன் முடிவடைகிறது. கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் சிறிது காலம் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு அனுமதி கோரியுள்ளது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார். இதற்கிடையில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாக தாய்லாந்தில் தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபமான அடிப்படையில் அனுமதி வழங்கி உள்ளது. அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக் கொள்ள வேண்டும் என்று தாய்லாந்து அரசு நிபந்தனை விதித்துள்ளது.

The post தொடர்ந்து ஓடும் ராஜபக்சே…. சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.