அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்து வழக்குகள் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உடைய நீதி அரசர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை தொடங்கினார்கள்.
சட்டப்படி பொதுக்குழு;
அப்போது பொது குழுவானது சட்டப்படிதான் கூட்டப்பட்டது என்றும், பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ஆம் தேதி பொது குழு கூட்டம் கூட்டப்பட்டதாகவும், இது சம்பந்தமான அறிவிப்பானது அனைத்து தொலைக்காட்சிகளிலுமே நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும் வாதங்களானது முன்வைக்கப்படுகிறது. மேலும் 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகவும், 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23ஆம் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும், வாதங்களானது முன்வைக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலமானது ஐந்து ஆண்டு:
மேலும் ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு தீர்மானம் என கூறி, பன்னீர்செல்வம் தரப்பில் தனி நீதியரசர் முன்பே இரு நீதிபதி அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானமானது வரைவு தீர்மானம் தான் என்றும், அது பொது குழு நிகழ்ச்சி நிரல் அல்ல என்றும் வாதங்களானது முன்வைக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலமானது ஐந்து ஆண்டுகளாக இருக்கும்போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியாகிறது என்று எதிர்க்கட்சித் தலைவரும் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நீதி தரப்பில் கேள்வி ஒன்றையும் எழுப்பினார்கள்.
ஒற்றை தலைமை;
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் நடைமுறைகளுக்கு பொது குழு ஒப்புதல் அளிக்காததால் தான், பதவிகள் காலாவதியாகிவிடும் . அதற்கு பதிலாக கடந்த 2017 ஆம் ஆண்டு நியமனத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் இரட்டை தலைமை தேவை இல்லை என்றும், ஒற்றைத் தலைமை தான் தேவை என்று ஜூன் 23ஆம் தேதி நடந்த நடைபெற்ற பொதுக்குழுவின் போது பொதுக்குழு உறுப்பினர்களுடைய விருப்பம் என்றும், நீதிமன்ற உத்தரவு காரணமாக அன்றைய தினம் அதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் வாதங்களானது முன்வைக்கப்பட்டது.
பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை:
மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் செயல்பட வேண்டும் என்றும், இருவருடைய பதவிகளும் காலாவதியாகிவிட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் கட்சி விவரங்களை கவனிப்பாளர்கள் என்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளோம் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் போல அல்லாமல் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாக வில்லை என்றும், ஏனென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளில் நடத்தப்பட்டது என்றும், அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் எதிர் கட்சித் தலைவரும், இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வாதங்களானது முன்வைக்கப்பட்டது.
தபால் மூலம் அழைப்பு;
மேலும் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்று கூற முடியாது எனவும், ஜூலை 23ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும், நோட்டீஸ் ஆனது தபால் மூலம் தெரிவிக்கப்பட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், கூட்டம் நடப்பது குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் நோட்டீஸ் என்றும் வாதங்களானது முன்வைக்கப்படுகிறது.
2432பேர் ஆதரவு:
மேலும் 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாகவும் கடிதம் அளித்துள்ள நிலையில், எனவே ஒருவருடைய சூழலை தனியாக பார்க்காமல், ஒட்டுமொத்த கட்சியினுடைய நிலையை தான் பார்க்க வேண்டும் என்றும், மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது என்றும், ஆனால் அதிமுகவில் தான் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்த உட்பட்டுள்ளதாகவும் வாதங்கள் அனைத்தும் முன் வைக்கப்பட்டது
இபிஎஸ் தரப்பு: மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன்
மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த வேண்டும் என்று எதிர் கட்சி தலைவரும், இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி கட்சியினுடைய கடிதம் அளித்துள்ளது என்றும் வாதங்களானது முன்வைக்கப்பட்டது. விஜயநாராயணன் மூத்த வழக்கறிஞருக்கு அவர்கள் வாதங்களானது நிறைவுற்ற நிலையில், அதனை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் அதிமுக சார்பில் எஸ் ஆர் ராஜகோபாலுடைய வாதமானது முன்வைக்கப்பட்டது.
விசாரணைக்கே உகந்ததல்ல:
அப்போது எதிர்மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டதற்கு, மனுதாரராக ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள இந்த மனுவானதை விசாரணைக்கே உகந்ததல்ல என்றும், எதிர் மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மனுதாரருக்கு இவ்வாறு செயல்படுகிறார் என்றும், கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டக்கூடிய அந்த வழக்கமான பொதுக்குழுவில் தான் 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு வழங்க வேண்டும். ஆனால் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளக்கூடிய பட்சத்தில் கூட்டப்படக்கூடிய அந்த பொதுக்குழுவிற்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் வாதங்களை முன்வைக்கிறார்.
ஓபிஎஸ் நீக்கம்;
மேலும் கட்சி அடிப்படை உறுப்பினர்களுடைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உடைய கோரிக்கை ஏற்கக்கப்பட்டால், பெரும்பான்மையான உறுப்பினர்களுடைய முடிவுக்கு எதிரானதாகிவிடும் என்றும் தெரிவித்தார். மேலும் மனுதாரர்களான பன்னீர் நடத்தையை கவனிக்க வேண்டும் என்றும், மறைமுகமாக தலைமை அலுவலக தலைமை அலுவலகத்தில் மோதல் குறித்து எதிர்க்கட்சிகள் தலைவரும், இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைத்தார்.
அடிப்படை உறுப்பினர்களுடைய பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள்:
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் விதிகளில் எந்த திருத்தமும் செய்யாததால் அவர்களுடைய தேர்தல் செல்லும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அடிப்படை உறுப்பினர்களுடைய பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள் . மேலும் அடி மட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் எடுக்ககூடிய முடிவுகள் தான் ஒட்டுமொத்த உறுப்பினர்களுடைய முடிவாக பார்க்க வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையைத்தான் ஆதரிக்க ஆதரிக்கிறார்கள் என்றும் எதிர் கட்சி தலைவரும், இடைக்கால செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அவை தலைவர் நியமனம்:
இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் சார்பில் வாதங்களானது முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து சார்பிலும் வாதங்களானது முன்வைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் வாதங்களை முன்வைக்கும் போது ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற போது பொதுகுழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அவை தலைவர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை காலாவதியாகிவிட்டதாக கூறுகின்றனர்.
தீர்ப்பு தள்ளி வைப்பு:
ஆனால் அவை தலைவர் நியமனத்திற்கு முன்மொழியும்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அழைக்கப்பட்டார் என்றும் வாதங்களானது முன்வைக்கப்படுகிறது. அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் ஆனது அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கினுடைய தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதி அரசர் தள்ளி வைத்துள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களா நடந்து வந்த இந்த வாதங்களானது நிறைவு பெற்றதையடுத்து தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் உடைய நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் இந்த வழக்கினுடைய தீர்ப்பை தற்போது தள்ளி வைத்துள்ளார்கள்.
Post Views:
0