வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் அதிசய நகரம் குறித்து ஒரு சில தகவல்களை பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பகுதியில் வெள்ளை இன மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். ஒரானியா என்ற பகுதியில் டச்சு வம்சாவளியை சேர்ந்த வெள்ளை இன மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்கள் கறுப்பின மக்களை சேராமல் தன்னிச்சையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஒரு அங்கம் என்று ஒரானியா கருதப்பட்டாலும், அங்குள்ள மக்கள் தங்களுக்கு என தனி அரசாங்கத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த பகுதிகளில் உள்ள அனைத்து துறைகளிலும் வெள்ளை இன மக்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். இந்த பகுதியில் ஒரு கருப்பின மக்களை கூட பார்க்க முடியாத சூழலில் இன்னும் கூட நிறப் பாகுபாடு திகழ்வதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் குடி பெயர்ந்த டச்சு வம்சாவளியைச் சேர்ந்த ஒரானியா மக்கள் தாங்கள் கருப்பின மக்களை வெறுக்கவில்லை என்றும், அவர்கள் எங்களுடன் சேர்ந்து வசிக்க விரும்பினால் கண்டிப்பாக நாங்கள் அவர்களை வரவேற்போம் என்றும் கூறியுள்ளனர். மேலும் கருப்பின மக்கள் தான் எங்கள பகுதிகளில் குடியிருக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளனர்.
Post Views:
0