சுவிஸ் அரசு கருப்பு பணத்தை ஊக்குவிக்காது…. தூதரக அதிகாரி அளித்த விளக்கம்…!!!


சுவிட்சர்லாந்து வங்கி சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் இயங்குகிறது எனவும் கருப்பு பணம் மற்றும் ஊழல் பணத்தை ஊக்குவிக்கவில்லை என்றும் தூதரக அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

வங்கதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சங்கம் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பு விருந்தினராக வங்க தேசத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான நதாலி சுர்ட் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருக்கிறார்களா? என்று கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு அவர் தெரிவித்ததாவது, சுவிட்சர்லாந்து வங்கி உலக நாடுகளின் முன்னணி வங்கி அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. வங்கிகளில் கருப்பு பணம் அல்லது ஊழல் பணம் வைத்திருப்பதை அரசாங்கம் விரும்பாது. வங்கதேசத்தை சேர்ந்த மக்கள், சுவிட்சர்லாந்து  வங்கியில் கணக்கு வைத்திருப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி இரண்டு நாட்டு அரசாங்கங்களும் விவாதம் செய்யலாம்.

மேலும் மக்கள் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பணம் கணக்கில் வைத்திருக்கிறார்கள் போன்ற தகவல்களை சுவிஸ் தேசிய வங்கி அளிக்கிறது. ஆனால் சட்ட விரோதமான பணமா? என்பதை அவர்களால் தெரிவிக்க முடியாது. சுவிட்சர்லாந்து வங்கியின் தவறுகள் அனைத்தையும் திருத்த எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன்படி, சுவிட்சர்லாந்து வங்கி சர்வதேச நடைமுறைகள் அடிப்படையில் இயங்குகிறது. ஊழல் பணம் மற்றும் கருப்பு பணத்தை வைத்திருப்பதற்கு விதிகள் எதுவும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.