தேசியக்கொடி வாங்காவிட்டால்…. ரேஷன் பொருட்கள் கிடையாதா….? மத்திய அரசு விளக்கம்….!!!!


75வது சுதந்திர தின விழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது பற்றி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் தேசிய கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசிய கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை உறுதிபடுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம் என கூறியுள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.