அதிமுக கட்சி விரைவில் ஒன்றுபடும்….. வி.கே சசிகலா தகவல்…. சிக்கலில் எடப்பாடி….!!!!


அதிமுக கட்சி மீண்டும் இணையும் என சசிகலா கூறியுள்ளார்.

அதிமுக கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர். கடந்த 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் தலைமையில் அதிமுக கட்சி தொடங்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்டார். இவருக்கு சுயேட்சையாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் நின்று மாயத்தேவர் வெற்றி பெற்றார். இதை சுயேட்சையாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தான் தற்போது அதிமுக கட்சியின் சின்னமாக மாறி உள்ளது. இந்நிலையில் மாயத்தேவர் உடல்நல குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய உடல் சின்னாளபட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், சசிகலா மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளேன். அதிமுக கட்சியானது பிளவுகளை கடந்து நிச்சயம் ஒன்றினையும் என்று கூறினார். ஏற்கனவே  இபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுப்பதற்காக சசிகலாவும், பன்னீர்செல்வமும் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதிமுக கட்சியானது விரைவில் ஒன்றுபடும் என்று கூறியுள்ளார். மேலும் சசிகலா விரைவில் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.