இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. யூனிட்டுக்கு 75 % அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும்.
இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றது. இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் தவித்து வரும் மக்களுக்கு, தற்போது மின் கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கின்றது.
The post இன்று முதல் மின்கட்டண உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!! appeared first on Seithi Solai.