இனி வரும் மாதங்களில் ஆதார் எண் இணைப்பை கொண்டவர்களுக்கு மட்டுமே நிதி தொகை வழங்கப்படும் என்ற அறிக்கையை தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசின் 100 சதவிகித பங்களிப்புடன் தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2019 ஆம் ஆண்டில் இருந்து நான்கு மாதத்திற்கு ஒருமுறை என மூன்று முறையும் தலா ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்கள் பலர் நன்மை அடைகின்றனர். இவ்வாறு விவசாய குடும்பங்களுக்கு உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூபாய் 6,000 வரை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு வழிகாட்டுதல் படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்ட பயனாளிகளும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து கொள்ளவும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஒ.டி.பி. பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே, அடுத்த 12 வது தவணை தொகையானது பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே நிதி தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
The post ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.2000 பெறலாம்…… இதை மட்டும் செய்தால் போதும்….. விவசாயிகளுக்கு குட் நியூஸ்….!!!! appeared first on Seithi Solai.