80 வயசு ஆகிடுச்சு…. ஆனாலும் விட்ருவோமா…. 80 வகையான சாப்பாடு, பணமாலை…. அசத்திய குடும்பத்தினர்….!!!!


இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் விமலாதேவி ( 80). இவரது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே தனது 8 மகள்கள், மற்றும் 2 மகன்களையும் தனி ஆளாக வளர்த்து ஆளாக்கியுள்ளார். அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் இவர், சுமார் 5 தலைமுறைகளை கண்டெடுத்துள்ளார்.

இந்த நிலையில், விமலாதேவியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு 80 வகையான இயற்கை முறையிலான உணவுகளை அவருக்கு இவரது குடும்பத்தினர் செய்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு பணமாலை, பரிவட்டம் அணிவித்து அவரது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்த நவீன உலகில், 80 வயது மூதாட்டிக்கு அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.