கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு…. பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!!


கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 13ஆம் தேதி 17 வயது மாணவி மர்மமாக இறந்து கிடந்தார்.. இது தற்கொலையல்ல, கொலை தான் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நீதிகேட்டு பள்ளியில் 4 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பள்ளி செயலாளர் சாந்தி, தாளாளர் ரவிக்குமார், 2 ஆசிரியர்கள்  உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாததால் விசாரணையை ஒத்தி வைத்தது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.