ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை….. போதை பொருள் விழிப்புணர்வு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!


தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நாளை காலை 10:30 மணிக்கு போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் முதல்வர் முக. ஸ்டாலின் போதை பொருள் கடத்தல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்தார். அதில் பல்வேறு ஆலோசனையை மு க ஸ்டாலின் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.