மத்திய வேளாண் அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 247.30 லட்சம் ஹேக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 314.14 லட்சம் ஹக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியா 21.2 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது.
அண்மை காலமாக வங்கதேசம், ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய அரிசிக்கு அதிக டிமாண்ட் உருவாகியுள்ளது.இதன் விளைவாக நெல் விதைப்பு குறைவாக இருப்பதாலும் ஜூன் மாதம் முதல் அனைத்து ரக அரிசி விலை சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்நிலையில் இந்தியாவில் நெல் விதைப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக அரிசி விலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Views:
0