நான் C.Mஆகணும்னு சொன்னாங்க..! எல்லாம் நிறைவேறி இருக்குமாம்… மக்கள் சொன்னதாக எடப்பாடி பேட்டி..!!


செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 14 மாதம் ஆகிறது, உண்மையிலேயே இந்த விவசாய பெரு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இந்த அரசு எண்ணியிருந்தால்,  வேகமாக துரிதமாக இந்த 100 ஏரியை நிரப்புகின்ற திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, பணியை செய்திருந்தால்,  இப்போது நிறைவேற்றப்பட்டு,  இன்றைக்கு மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற உபரி நீர் நீரேற்று மூலமாக இந்த நூறு ஏரியை நிரப்பி இருக்கலாம்.

ஆனால் மாண்புமிகு அம்மாவுடைய அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காகவே இந்த திட்டத்தை முடக்கி,  ஆமை வேகத்தில் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே தான் நான் நேரடியாக வந்து இந்த திட்டத்தை பார்வையிடுவதற்காக,  வந்து இன்றைக்கு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் விரைவாக, வேகமாக, துரிதமாக, இந்த பணிகள் நிறைவு பெற்றிருந்தால், இந்த ஆண்டு பருவ மலையிலே மேட்டூர் அணை நிரம்பி உபரியாக வெளியேற்றுகின்ற நீரை, நீரேற்று மூலமாக இந்த 100ஏரிக்கு நிரப்பி இருக்கலாம், அதை செய்ய இந்த அரசு தவறிவிட்டது. உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இல்லாத ஒரு அரசாங்கம் என்பதை தான் இது காட்டுகிறது.

படிப்படியாக நிதி நிலைக்கு ஏற்ப நாம் செய்யலாம் என்று நினைத்திருந்தோம், அங்கேயும் தர்மபுரி மாவட்ட மக்கள் கடுமையான வறட்சியாக இருக்கிறது, வறட்சியான பகுதிக்கு நீர் ஏற்றின் மூலமாக…  மேட்டூர் அணைக்கு உபரி நீர் வருகின்ற போது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற ஏரிகளை நிரப்பினால்…..  நிலத்தடி நீர் உயர்ந்து அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும். விவசாயத்திற்கு தேவையான நீரும் கிடைக்கும் என தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்ற வேண்டும், அடுத்ததாக அந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த ஆட்சியாளர்கள் செய்வார் என்று நம்பி இருக்கிறோம்.

மக்களுடைய கருத்து என்ன ? நீங்கள் முதலமைச்சராக இருந்தால்.. இந்நேரம் இந்த  திட்டம் நிறைவேறி, இந்த ஏரி எல்லாம் நிரம்பி இருக்கும். ஏனென்றால் இன்றைக்கு மழைக்காலத்தில் பெய்த மழை நீர், மேட்டூர் அணையின் நிரம்பி உபரி நீராக கடலில் சென்று கலந்து கொண்டிருக்கிறது. கடலில் கலக்கின்ற அந்த நீரை,  நீங்கள் முதலமைச்சராக இருந்து அம்மாவுடைய ஆட்சி இருந்திருந்தால், இந்த திட்டம் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டிருக்கும். ஆனால் வந்த அரசாங்கம் மெத்தனப்போக்கின் காரணமாக இந்த பணி வேகமாக செய்யாமல் முடங்கி இருக்கின்றது. இனியாவது இந்த அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு, விவசாயிகளினுடைய எண்ணங்களை உணர்வுகளை புரிந்து கொண்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

The post நான் C.Mஆகணும்னு சொன்னாங்க..! எல்லாம் நிறைவேறி இருக்குமாம்… மக்கள் சொன்னதாக எடப்பாடி பேட்டி..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.