44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் மேல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை தொடங்கி தற்போது மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் தலைவர்கள் உள்ளிட பலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் 3வது போர்டில் விளையாடிய பிரக்ஞானந்தாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. அதேபோல 3வது போர்டில் மகளிர் பிரிவில் விளையாடிய பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலியும் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இருவரும் ஒரே மேடையில் பரிசு வாங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post 44வது செஸ் ஒலிம்பியாட்…. ஒரே மேடையில் பரிசு வாங்கிய அக்கா – தம்பி..!! appeared first on Seithi Solai.