“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தின் பாடல் வெளியீடு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!


முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.

நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழிபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு 2ஆம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடல் ரங்கராட்டினம் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அந்த வகையில் இந்த பாடல் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தின் பாடல் வெளியீடு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.