கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தை…. வனத்துறையினர் சூப்பர் சாதனை… !!!


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகில் உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு சிறுத்தை ஒன்று வெளியேறியது. அந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்புசாமி என்பவருடைய தோட்டத்தில் சிறுத்தையை பிடிப்பதற்காக பவானிசாகர் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

மேலும் வனத்துறையினர் சிறுத்தை நடமாடத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் குப்புசாமி தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை நேற்று முன்தினம் அதிகாலை சிக்கியது. இது பற்றி தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூண்டை பார்வையிட்டனர். அப்போது அந்த கூண்டில் ஆண் சிறுத்தை ஒன்று சிக்கியிருந்தை பார்த்தனர். இதனையடுத்து சிறுத்தையை வனத்துறையினர் இன்னொரு வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். மேலும் சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.