சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை….. எப்போது வரை தெரியுமா….? வெளியான தகவல்….!!!


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்றுஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அதேபோல வருகிற 11ம் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடக்கிறது. வழக்கமாக பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் குறுக்கே செல்லும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.