முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நான்காவது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயரம் கொண்டதாகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. மேலும் இந்த அணையில் பருவ காலத்திற்கு ஏற்ப நீர்மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதி சென்ற வருடம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் அணையில் 137.5 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம்.
இந்த நிலையில் சென்ற சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்திருக்கின்றது. இந்தநிலையில் சென்ற மூன்று நாட்களாக கேரளாவுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருக்கும் மொத்தம் பத்து மதகுகள் வழியாக உபரி நீரானது திறக்கப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் கேரளாவுக்கு வினாடிக்கு 316 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
Post Views:
0