மீனம் ராசிக்கு…! திருப்தி கிடைக்கும்…! பண வரவு உண்டாகும்…!!


மீனம் ராசி அன்பர்களே..!
இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும்.

நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விசயங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். போட்டிகள் குறையும். யாரை நம்புவது என்ற குழப்பம் உண்டாகும். மனதை தெளிவு படுத்துங்கள்.

தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள். காரியங்களில் பெரியோர்களிடம் ஆலோசித்து முடிவெடுங்கள். மனைவியிடம் கலந்து ஆலோசித்து எந்தவொரு முடிவையும் எடுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் வெள்ளை நிறம்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.