சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகின்றது. பா ரஞ்சித் ஆர்யா கூட்டணியில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கின்றார். மேலும் கலையரசன், சந்தோஷ் பிரதாப் பசுபதி, சஞ்சனா நடராஜன், காளி வெங்கட் போன்ற பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். வட சென்னையில் இரு பரம்பரையினருக்கு இடையே நடைபெறும் பாக்சிங் போட்டி மற்றும் பாக்ஸ் வீரர்கள் எப்படி வன்முறைக்கு தள்ளப்படுகின்றார்கள் என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
படத்தின் இசை, உருவாக்கம் நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ஒரு சேர சங்கமித்து ரசிகர்களுக்கு சிறந்த விருதாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. சார்பட்டா படத்தின் இசை உருவாக்கம் நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ஒரு சேர சங்கமித்து ரசிகர்களுக்கு சிறந்த விருதாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதற்கு முன்னரே சார்பட்டா பரம்பரை படத்தின் கதை வெப் சீரியஸ் ஆக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அதில் டான்சிக்ரோஸ், டாடி கதாபாத்திரங்கள் எப்படி பாக்சிங் வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளனர் என்ற கதைக்களத்தில் வெப் சீரிஸ் உருவாகலாம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Post Views:
0