காவல்துறை பதவிகளும் பதவி சின்னங்களும்…. முழு விவரம் இதோ…. வாங்க பார்க்கலாம்….!!!!!!!


காவலர் முதல் காவல்துறை தலைமை இயக்குனர் வரை அனைவரும் காக்கி சீருடை இருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படை தகுதிகளும் வேறு என்பது நமக்கு தெரியும். காவல்துறை அலுவலர்களின் உடையில் உள்ள வேறுபாடுகளை பற்றி சிறிது காண்போம். காவல்துறை தலைமை இயக்குனர் தன் சீருடையின்  தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ்இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் மற்றும் காலரில் ரிப்பன் போன்றவை இருக்கும்.

காவல்துறை கூடுதல் இயக்குனர் தன் சீருடை தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பையில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் போன்றவை இருக்கும். காவல்துறை துணை தலைவர் தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம், 5 முனை  தாரகை, அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், போன்றவை இருக்கும். காவல்துறை துணை தலைவர் தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம், அதனடியில் முக்கோணவடிவில் மூன்று தாரகைகள் இருக்கும்.

தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளர் சீருடையின்  தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம், அதனடியில் முக்கோண வடிவில் இரண்டு தாரைகள் இருக்கும். காவல் கண்காணிப்பாளர் சீருடை தோள்பட்டையில் ஐபிஎஸ் அல்லது டிபிஎஸ் அசோக் சின்னம், அதனடியில் ஒரு தாரகை இருக்கும். இணை காவல் கண்காணிப்பாளர் சீருடை தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம் இருக்கும்.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீருடை தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம் இருக்கும்.

உதவி காவல் கண்காணிப்பாளர் சீருடை தோள்பட்டையில் ஐபிஎஸ் மூன்று தாரகைகள், துணை கண்காணிப்பாளர்கள் தோள்பட்டையில் டிபிஎஸ் மற்றும் 3 தாரகைகள் இருக்கும்.உதவி கண்காணிப்பாளர் சீருடை தோள்பட்டையில் ஐபிஎஸ் மற்றும் ஒரு தாரகை இருக்கும் துணை காவல் கண்காணிப்பாளர் சீருடை தோள்பட்டையில் டிபிஎஸ் மற்றும் ஒரு தாரகை இருக்கும்.மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் கருநீல ஊதாக் கயிறு இடது தோள்பட்டையில் அணிந்திருப்பார்கள்.

காவல் சார்பு ஆய்வாளர் சீருடை தோள்பட்டையில் டிபி கருநீல சிகப்பு ரிப்பன் மற்றும் மூன்று தாரைகள் இருக்கும். காவல் சார்பு ஆய்வாளர் சீருடை தோள்பட்டையில் டிபி கருநீல சிகப்பு ரிப்பன் மற்றும் இரண்டு தாரைகள் தாலுகா காவல் ஆய்வாளர்களும், சார்பு ஆய்வாளர்களும் காக்கி நீற  ஊதல்  கயிறு அணிகின்றார்கள். மேலும் ஆயுதப்படை ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் கரும்பச்சை நிற ஊதல்  கயிறு அணிகின்றார்கள்.

காவல் சார்பு ஆய்வாளர் சீருடை தோள்பட்டையில் டிபி கருநீல சிவப்பு ரிப்பன் மற்றும் ஒரு தாரகை தாலுகா காவல் ஆய்வாளர்களும் சார்பாக ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் கரும்பச்சை நிற ஊதா கயிறு அணிகின்றார்கள். சார்பு  ஆய்வாளர்களில் இருந்து காவல் துறை தலைமை இயக்குனர் வரை உள்ள அலுவலர்கள் தங்கள் பதவிகளுக்கு ஏற்ப அசோக சின்னமுடைய தவிட்டு  அல்லது பழுப்பு நிற இடைகச்சைகளும்  அதே நிறமுடைய காலணிகளும் அணிகின்றார்கள் தலையணி தொப்பி அல்லது பெரே ஆகும்.

மேலும் தலைமை காவலர் சீருடை மேற்கையில் 3 பட்டை அணிய வேண்டும். முதல் நிலை காவலர் சீருடையின்  மேற்கையில் இரண்டு பட்டை அணிய வேண்டும். தலைமை காவலர் நீல நிற செர்ஜ் தொப்பியில் வெளிர் நீல நிற ரிப்பன் சுற்றப்பட்டு இருக்கும் முதல் நிலை காவலரும் தலைமை காவலரும் பக்கிள்  உடைய நீல நிற இடைக்கச்சையும் அணிகின்றார்கள் காலனி அனைவருக்கும் கருப்பு நிறம் ஆகும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.