பவர் கட் வரவே கூடாது…! ரொம்ப வேகமா செயல்படுறோம்…! ப்ளீஸ் அரசியலாக்காதீங்க…


செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 33 ஆயிரம் மின்கம்பங்கள் இருக்கிறது, அதேபோல 10,000 கிலோமீட்டர் அளவிற்கு மின் கம்பிகள் தயார் நிலையில் இருக்கிறது, எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிகள் சிறப்பு பராமரிப்பு பணிகளாக மேற்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பாக கடந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளை மூன்று வகையாக பிரித்தோம். எது மிகவும் முக்கியமானது ? எது அடுத்து செய்யக்கூடியது என்று ? ஒரே நேரங்களில் மொத்த பணிகளையும் நாம் எடுத்தோம் என்றால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். பராமரிப்பதற்காக நிறுத்தி வைப்பது கூட, மின் விநியோகத்தில் பாதிப்பு என செய்திகள் வருகின்றது.

அதனால் மூன்று வகையாக பிரித்து இருக்கிறோம். முதல் கட்ட பணிகள் முடிந்து, இரண்டாவது கட்டப் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை…. கடந்த காலங்களில் ஏற்பட்ட மழைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வந்து பார்த்தீர்கள் என்றால்…. கன்னியாகுமரியில் பார்த்தீர்கள் என்றால் 100 டிரான்ஸ்பார்மக்கள் மேல ஹைட் பண்ணிட்டோம்.

1681க்கும் மேல இடங்களில் சென்னையில் மட்டும் பில்லர் பாக்ஸ் ஒரு மீட்டர் அளவிற்கு ஹைட் பண்ணியிருக்கிறோம். மீதமுள்ள பணிகள் கணக்கெடுக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் ஏற்பட்ட BNC மில் போனோம். போன வருடம் போகும்போது முழங்கால் தண்ணீருக்கு மேலேதான் உள்ளே நடந்து போனோம்.

இப்போ அத பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாச்சு. இப்போ அதே BNC மில்லில் மீதமுள்ள இடங்களில் துணை மின் நிலையங்கள் மின்விநியோகத்திற்காக செய்கிறோம்.  ஏறத்தாழ 2200 இடங்கள் சென்னையில் மட்டும் ஆர்எம்யூ பொருத்தப்பட்டுள்ளது. இது எல்லாம் கடந்த வருடங்களில் மழைக்கு  பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செய்யப்பட்ட பணிகள். இதை அரசியலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.