“லால் சிங் பட்டா திரைப்படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி”…. காரணம் குறித்து பேசிய நாக சைத்தன்யா…!!!!!


அமீர்கானின் லால் சிங் பட்டா திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடிக்க மறுத்தார் என பேட்டி ஒன்றில் நாக சைதன்யா கூறியுள்ளார்.

அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் பட்டா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா நடித்துள்ளார். இத்திரைப்படம் மூலம் நாக சைதன்யா பாலிவுட்டில் அறிமுகம் ஆகின்றார். இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விஜய் சேதுபதி தான் ஒப்பந்தமானாராம். ராணுவ வீரராக விஜய் சேதுபதி நடிக்க உடல் எடையை குறைக்க சொன்னார்களாம்.

ஆனால் அவர் வெயிட் போட்டதால் திரைப்படத்திலிருந்து நீக்கிவிட்டதாக செய்தி வெளியானது. இல்லை இல்லை நீக்கவில்லை. டேட்ஸ் பிரச்சனையால் விஜய் சேதுபதி தான் திரைப்படத்திலிருந்து விலங்கினார் என பின்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நாக சைத்தன்யாவிடம் கேட்கப்பட்டபொழுது அவர் கூறியுள்ளதாவது, டேஸ் பிரச்சனையால் விஜய் சாரால் நடிக்க முடியாமல் போனது என என்னிடம் தெரிவித்தார்கள். நான் வந்த பிறகு என் கதாபாத்திரம் அதற்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்பட்டது. லால் சிங் பட்டா திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதியை நீக்கிவிட்டதாக பேச பட்ட நிலையில் இது குறித்த உண்மையை நாக சைத்தன்யா கூறியுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.