பிரபல நாட்டில் 3 நாளாக நிலவிய பதற்றத்திற்கு முடிவு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!


இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் தளபதி தைஷர் அல் ஜபரி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் குழு ஆகியோர் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எகிப்தின் கைரோ நகரில், இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது தாக்குதலை நிறுத்துவது குறித்து இரு தரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இரவு 11.30 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 3 நாட்களாக நடைபெற்ற “ஆபரேசன் பிரேக்கிங் டான்” மூலம் கணிசமான இலக்குகளை எட்ட முடிந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.ம அதனைத்தொடர்ந்து பயங்கரவாத அமைப்பு என்று இஸ்ரேல் கருதக்கூடிய இஸ்லாமிய ஜிஹாத்தின் ஆயுத கிடங்குகள், ராக்கெட் ஏவுகணைகள் ஆகியவற்றை தங்களால் அழிக்க முடிந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினரின் கோரிக்கை படி, தங்களுடைய இரு தளபதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அப்படி நடந்தால் சண்டை நிறுத்தம் செய்ய தயார் என்று அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அமைதி தொடரும் என்றும் இல்லையெனில், தற்போது அமலுக்கு வந்துள்ள சண்டை நிறுத்தம் மீண்டும் தொடங்கும் என்று பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் உள்ள கைதிகள் இரண்டு பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்

 


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.